அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க திட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பா ளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பா ளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கலெக்டரிடம் மனு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோவை அ.தி.மு.க. கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகள், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், ஆளும் தி.மு.க. அரசிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
அவர்கள், அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களை வாங்காமல் தேவையற்ற காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் கண்டனத்துக்குரியது.
வழிகாட்ட வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி, அதற்கான ஆவணத்தை வேட்பு மனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைய விதிமுறைகளிலும், வழிகாட்டு கையேட்டிலும் குறிப்பிடப்பட வில்லை.
மேலும் வேட்பாளரின் பெயருக்கு பின்னால் இனிசியல் போட வேண்டும் என பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்படாத ஒன்று.
வேட்பாளர் வழிகாட்டி கையேடு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளில், குறிப்பிட்டு உள்ளதை தவிர வேறு எந்த ஆவண சான் றிதழ்களையும் இணைக்க வேட்பாளர்களை வற்புறுத்தவோ, துன்புறுத்த வோ கூடாது.
எனவே கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டு வழிகாட்டு உத்தரவின்படியும், ஜனநாயக ரீதியாக வும், அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடைபெற தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு கலெக்டர் வழிகாட்டு நெறிமுறை களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
விசாரிக்க வாய்ப்பு
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏதாவது ஒரு காரணம் கூறி தேர்தல் அதிகாரிகள் உதவியுடன் நிராகரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏராளமான மாணவ-மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்தலின் போது என்னையும், எங்கள் எம்.எல்.ஏ.க்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இதற்கு எல்லாம் நாங்கள் அச்சப்பட மாட்டோம்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின். கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






