அதிமுக பெண் வேட்பாளருக்கு ரூ 38 கோடிக்கு சொத்து


அதிமுக பெண் வேட்பாளருக்கு ரூ 38 கோடிக்கு சொத்து
x
தினத்தந்தி 4 Feb 2022 10:32 PM IST (Updated: 4 Feb 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி 38-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ரூ.38¾ கோடிக்கு சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை

கோவை மாநகராட்சி 38-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ரூ.38¾ கோடிக்கு சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 28-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்ய காலக்கெடு முடிந்தது.

கோவை மாநகராட்சி 38-வது வார்டில், அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி இணைச் செயலாளர் சர்மிளா சந்திரசேகர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

இதன்படி அவர் மேற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைத்து இருந்த பிரமாண பத்திரத்தில் ரூ.38¾ கோடிக்கு சொத்து இருப்பதாக காட்டி உள்ளார்.

ரூ.38¾ கோடிக்கு சொத்து 

அதில், தன்னிடம் ரூ.1 கோடியே 97 லட்சத்து 78 ஆயிரத்து 787-க்கும், கணவர் சந்திரசேகரிடம் ரூ.19 கோடியே 57 ஆயிரத்து 256-க்கும் அசையும் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம் என்றும், தனது கணவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.13 கோடியே 52 லட்சம் என்றும் பதிவிட்டு உள்ளார்.

 மேலும் தனக்கு ரூ.3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்துக்கு பரம்பரை சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 787 எனவும், தனது கணவரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 256 ரூபாய் என ரூ.38 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 43-க்கு சொத்து இருப்பதாகக் கூறி உள்ளார்.

 இதேபோல் ரூ‌.3 கோடியே 70 லட்சத்திற்கு கூட்டு குடும்ப சொத்து இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்து உள்ளார். 


Next Story