கோவையில் ராஜா வேடமணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்


கோவையில் ராஜா வேடமணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்
x
தினத்தந்தி 4 Feb 2022 10:47 PM IST (Updated: 4 Feb 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ராஜா வேடமணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்

கோவை

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் மும்முரமாக ஈடுபட்டனர். இதையொட்டி  மாட்டு வண்டி மட்டும் குதிரைகளில் வந்து மனு தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான குனியமுத்தூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு சுயேட்சை வேட்பாளரான நூர் முகமது என்பவர் ராஜா வேடம் அணிந்து, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லாரும் இந்த நாட்டு மன்னர்கள் தான், எல்லாரும் ராஜாக்களை போல வாழ வேண்டியவர்கள் என்பதை அறிவுறுத்துவதற்காக இந்த வேடம் அணிந்து வந்தேன், என்றார்.

இதேபோல் அந்த அலுவலகத்திற்கு 95-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் விலங்கு நல ஆர்வலர் ராஜசேகர் என்பவர் நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகிய தலைவர்களின் வேடமணிந்தவர்களை தன்னுடன் அழைத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில் தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இவ்வாறு வந்தேன் என்றார்.


1 More update

Next Story