நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்


நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
x
நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
தினத்தந்தி 5 Feb 2022 9:57 PM IST (Updated: 5 Feb 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

கோவை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1,130 பேர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை அந்தந்த மண்டல அலுவலகங்களில் நடைபெற்றது. 

வார்டு எண் 5-ல் போட்டியிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் கோவை கிழக்கு மண்டலத்தில் சரிபார்க்கப்பட்டது. இதற்காக வேட்பாளர்கள் 10.30 மணிக்கு அழைக்கப்பட்டனர். 

ஆனால் இந்த வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த பாலாமணி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால், குறித்த நேரத்தில் வேட்பு மனு பரிசீலனையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே பாலாமணியின் வேட்பு மனுவை பரிசீலனை செய்த உதவி தேர்தல் அதிகாரி வேட்பு மனுவில் ஒரு இடத்தில் கையெழுத்துபோடாமல் இருந்ததை தொடர்ந்து அந்த மனுவை தள்ளுபடி செய்தார். 


சிறிது நேரம் கழித்து வந்த நாம் தமிழர் கட்சி பாலாமணி வேட்பு மனு தள்ளுபடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருடன் இணைந்து நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story