காட்டுயானை கவலைக்கிடம் தொடர்ந்து தீவிர சிகிச்சை


காட்டுயானை கவலைக்கிடம் தொடர்ந்து தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 6 Feb 2022 11:16 PM IST (Updated: 6 Feb 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

காட்டுயானை கவலைக்கிடம் தொடர்ந்து தீவிர சிகிச்சை

துடியலூர்

கோவை அடுத்த பெரிய தடாகம் அனுபவி சுப்பிரமணியசாமி கோவில்வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தது. 

அப்பகுதியில் சென்றவர்கள் இதனை பார்த்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் கால்நடை மருத்துவர் அசோகன்,வன அலுவலர் அருண் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பார்த்தனர். 

உடல் சோர்வாக காணப்பட்ட யானைக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. மேலும் யானையின் உடலில்  பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் யானை கவலைக்கிடமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story