தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 6 Feb 2022 11:29 PM IST (Updated: 6 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

பழுதான கடிகாரம்

குன்னூர் பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு உள்ளது. மிகவும் பழமையான இந்த மணிக்கூண்டில் கடிகாரம் வைக்கப்பட்டு இருக்கிறது. அது கடந்த சில நாட்களாக இயங்காமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடிகாரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து அதை இயங்க வைக்க வேண்டும்.
சிவகுமார், குன்னூர்.

காட்டு பன்றிகள் தொல்லை

  கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் சாலைகளில் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கும்பலாக சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சில நேரத்தில் கட்டுப்பன்றிகள் பொதுமக்களையும் தாக்கி வருகிறது. எனவே தனியாக நடந்து செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும்.
  முகமது இப்ராகிம், கோத்தகிரி.

குண்டும் குழியுமான சாலை

  கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
  ராஜா, கோவை.

வாகன ஓட்டிகள் அவதி

  கோவை -பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் தாமரைக் குளம் பகுதியில் சிக்னல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னலில் உள்ள விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிருவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதுடன், அந்தப் பகுதியில் சிக்னல் இருப்பது தெரியாமல் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிக்னல் ஒளிர வழிவகை செய்ய வேண்டும். 
  சிவகணேஷ், தாமரைக்குளம்.

குரங்குகள் தொந்தரவு

  பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தப் பகுதி யில் உள்ள வீதிகளில் அடிக்கடி குரங்குகள் புகுந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. இதனால், வீதியில் நடமாடும் பெண்கள், சிறுமிகள் பயந்த நிலையில் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
  கணேஷ், பொள்ளாச்சி.

தீயணைப்பு நிலையம் வேண்டும்

  நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தேங்காய் நார் தொழிற்சாலை, கோழிப்பண்ணைகள், விசைத்தறிகள், மரமில் கள், மரக்கடைகள் பிளாஸ்டிக் பைப் தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள தேங்காய்நார் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது. இதனால் பொள்ளாச்சியிலேயா அல்லது கிணத்துக்கடவில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டும். எனவே நெகமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
  சந்திரகுமார், நெகமம்.

விளையாட்டு மைதானம் இல்லை

  கோவை குறிச்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விளையாட விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. இதனால் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளியே கொண்டு வர முடியாமல் உள்ளனர். இங்குள்ள காந்திஜி சாலையில் பழயை உழவர் சந்தை உள்ளது. இது செயல்படாமல் இருக்கிறது. எனவே அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும். அதை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  கருணாகரன், குறிச்சி.

நிரம்பி வழியும் கழிவுநீர் 

  கோவை சுண்டக்காமுத்தூர் அய்யப்பன்கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் நிரம்பி வெளியே செல்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
  சண்முகசுந்தரம், சுண்டக்காமுத்தூர்.

பழுதான ரோடு

  கோவை தடாகம் சாலையில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சாலை பழுதடைந்து உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு பழுதான இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  பிரபு, வீரகேரளம்.
  


Next Story