கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது
கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது
கோவை
கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் பூங்கா வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வ.உ.சி. உயிரியல் பூங்கா
கோவை மாநகரின் மையப்பகுதியில் கடந்த 1965-ல் முதல் 5 ஏக்கர் பரப்பளவில் வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது.
இங்கு முன்பு சிங்கம், கரடி, புலி, மான் மற்றும் பறவைகள் இருந்தன.
ஆனால் மாநகராட்சி பூங்காவில், சிங்கம், புலி, கரடி போன்றவற்றை பராமரிக்க, மத்திய வனஉயிரின பூங்கா ஆணையம் தடைவித்தது.
இதனால் அங்கிருந்த சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் சென்னை வண்டலூர் பூங்காவுக்கு மாற்றப்பட்டன.
இதையடுத்து உயிரியல் பூங்காவை புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
பூங்கா குறைந்தபட்சம் 25 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும் என மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் அறிவுறுத்தியது.
அனுமதி ரத்து
அதை ஏற்று மாநகருக்கு வெளியே இடம் தேடப்படுவதாக அளித்த உறுதியை ஏற்று, வ.உ.சி., உயிரியல் பூங்காவுக்கான அனுமதி புதுப்பிக் கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் பூங்கா இடமாற்றம் செய்யப் படவில்லை.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவின் அனுமதி புதுப்பிக்கப்பட வில்லை.
இந்த நிலையில் வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கேட்டு மாநக ராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் பூங்காவில் கட்ட மைப்பு குறைபாடு மற்றும் இயற்கை சூழல் இல்லை என்று கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அனுமதியை கடந்த மாதம் 5-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பூங்காவை பராமரிக்க தமிழக உயிரியல் பூங்காவுக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், பூங்கா பராமரிப்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் பொறுப்பு ஏற்றதும், புறநகர் பகுதியில் பூங்கா அமைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story