இலவச வீட்டுமனை பட்டாவில் முறைகேடு
இலவச வீட்டுமனை பட்டாவில் முறைகேடு
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காரமடை கருப்ப ராயன் நகரை சேர்ந்த அம்மாசையம்மாள் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது
எனது கணவர் கடந்த 2011-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த எங்களுக்கு 1993-ம் ஆண்டு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டுப்பா ளையம் வட்டாரம் சிக்காரம்பாளையத்தில் வீட்டுமனை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கு ரூ.150 செலுத்தி பட்டா பெற்றுக் கொள்ளு மாறு எங்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த பணத்தை செலுத்திய பிறகும் பட்டா கொடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையால் எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை எங்கள் பகுதியில் குடியிருக்கும் அரசியல் பிரமுகர் ஒருவர் தவறான தகவல்களை தெரிவித்து தனது மனைவியின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து விட்டார்.
அவர் முறைகேடாக பல இடங்களுக்கு பட்டா வாங்கியுள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர்.
தற்போது நான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாததால், மின் இணைப்பு, வரி செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகிறேன்.
எனவே தவறான தகவல் கூறி பட்டா வாங்கிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story