பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 Feb 2022 11:02 PM IST (Updated: 7 Feb 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 

அத்துடன் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36  வார்டுகள் உள்ளன. 

இந்த வார்டுகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அலுவலர்களுக்கு பயிற்சி

அதன்படி கடந்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த பயிற்சி நடந்தது. 

இதில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் ஆகியவற்றை கையாளுவது எப்படி? என்பது குறித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து செயல்விளக்கம் காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

வழிகாட்டு நெறிமுறைகள்

அத்துடன் வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா என கண்டறிய வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் முடிவடையும் வரை உள்ள நேரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா பரவி வருவதால், வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Next Story