கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுகளில் மொத்தம் 3,366 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுகளில் மொத்தம் 3,366 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுகளில் மொத்தம் 3,366 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுக்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி கள், 33 பேரூராட்சிகளில் மொத்தம் 811 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கி றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 1,130 பேரும், 7 நகராட்சிகளில் உள்ள 198 வார்டுகளுக்கு 1,097 பேரும், 33 பேரூராட்சிக ளில் உள்ள 513 வார்டுகளுக்கு 2,346 பேரும் என மொத்தமாக 4,573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பரிசீலனை
அவை அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் 5-ந் தேதி பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் மாநகராட்சியில் 86 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1,042 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7 நகராட்சிகளில் 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1,067 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
33 பேரூராட்சிகளில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 2,317 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி மாவட்டத்தில் 811 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அளிக் கப்பட்ட 4,573 மனுக்களில் 144 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4,426 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
3,366 பேர் போட்டி
இதைத்தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் கோவை மாநகராட்சி யில் 264 பேரும், 7 நகராட்சிகளில் 206 பேரும், 33 பேரூராட்சிகளில் 582 பேரும் என நேற்று 1,052 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர் களும், 7 நகராட்சிகளில் உள்ள 198 வார்டுகளில் 861 வேட்பாளர்களும், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் 1,727 வேட்பாளர்கள் என 811 இடங்களுக்கு மொத்தம் 3,366 பேர் போட்டியிடுகின்றனர்.
சின்னம் ஒதுக்கீடு
இதில் பேரூராட்சி வார்டுகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டனர். இதையடுத்து பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 513 வார்டுகளில் 504 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 811 இடங்களில் 802 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேட்பாளர்களுக் கான சின்னங்களும் நேற்று ஒதுக்கப்பட்டன. முன்னதாக ஒரே சின்னத்தை தேர்வு செய்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story