ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்ற காட்டு யானைகள்
வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்ற காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் 11 யானைகள் கொண்ட கூட்டம் நள்ளிரவில் புகுந்தது. இந்த யானைகள் கூட்டம் குடியிருப்புக்கு அருகில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையின் கதவை உடைத்து கடைக்குள் இருந்த 2 மூட்டை ரேஷன் அரிசிகளை எடுத்து சாப்பிட்டு விட்டு சென்றது. பின்னர் தொழிலாளர்கள் குடியிருப்பு வழியாக நடந்து சென்று அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் கூடுதுறை பகுதியை ஒட்டிய வனப்பகுதிக்குள் முகாமிட்டு உள்ளன. வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் உள்ள செலாளிப்பாறை எஸ்டேட் பகுதியில் ஒற்றை காட்டு யானை பட்டபகலில் வால்பாறை சோலையாறு அணை செல்லும் சாலையை கடந்து தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்தது. இதுபற்றி அறிந்ததும் சம்பவயிடத்திற்கு வந்த வனச்சரகர் மணிகண்டன் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
Related Tags :
Next Story