பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அகற்றம்
ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்து காணப்பட்ட 4 வகுப்பறைகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆனைமலை
ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்து காணப்பட்ட 4 வகுப்பறைகள் இடித்து அகற்றப்பட்டன.
கலெக்டர் உத்தரவு
கோவை மாவட்டம் ஆனைமலையில் வி.ஆர்.டி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 40 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் 1,400 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளி சார்பில் அந்தக் கட்டிடங்களை இடிக்க பொதுப்பணித்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் என சமீபத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
இடித்து அகற்றம்
இந்த உத்தரவின் பேரில் நேற்று அரசு பெண்கள் பள்ளியில் பழைய பழுதடைந்து காணப்பட்ட 4 வகுப்பறைகள் இடிக்கும் பணி நடந்தது. அந்த வகுப்பறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இதுபற்றி பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:-
மாணவிகளின் நலன் கருதி பழுதடைந்து பள்ளிக்கூட வகுப்பறைகள் இடிக்கப்பட்டன. மேலும் இடிக்கப்படும் பணிகள் நிறைவடைந்த பின்னர் அங்கு புதிய வகுப்பறைகள் விரைவில் கட்டப்படும் என்றனர்.
Related Tags :
Next Story