வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
உடுமலை நகராட்சி தேர்தல் பகுதி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைவாக்குச்சாவடி அதிகாரிகள் 77ப ேர், வாக்குச்சாவடி அலுவலர்கள் எண் 1, 2, மற்றும் 3என ஒவ்வொன்றுக்கும் 77 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில ்வாக்குப்பதிவு நாளில்தலைமை வாக்குச்சாவடி அதிகார்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோருக்கான பணிகள் குறித்த 2-வதுகட்ட பயிற்சி வகுப்பு உடுமலை நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மஹாலில் நடந்தது. பயிற்சி வகுப்பை தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் முறை, மாதிரி வாக்குப்பதிவு, படிவங்களை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.
Related Tags :
Next Story