தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ 1 ½ லட்சம் பறிமுதல்
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.1½ லட்சம் பறிமுதல்
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் இருந்தவரிடம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 400 இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் ஆவணங்கள் இல்லை.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் கோவை இடையர்பாளையம் சரவணா நகரை சேர்ந்த சரவணன் என்பதும், தனியார் நிறுவனம் நடத்தி வருவதும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
ஆவணங்கள் ஒப்படைப்பு
இருந்த போதிலும் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் சரவணன், அந்த பணத்துக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதை சரிபார்த்தபிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story