கோவையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 ம் கட்ட பயிற்சி


கோவையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 10 Feb 2022 10:35 PM IST (Updated: 10 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பகுதியில்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இதை தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை

கோவை மாநகராட்சி பகுதியில்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இதை தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

2-ம் கட்ட பயிற்சி 

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர் கள், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 172 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி முதற்கட்ட பயிற்சி கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. ேநற்று 2-ம் கட்ட பயிற்சி கோவை நிர்மலா கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, குனியமுத்தூர் ஆயிஷா ஹால், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் ஆகிய 4 இடங்களில் நடந்தது. இந்த பயிற்சியில் மொத்தம் 6,192 பேர் பங்கேற்றனர்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 50 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களை கையாளுவது, அதில் பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும். 

வாக்குப்பதிவு முடிந்ததும் எவ்வாறு சீல் வைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு செயல் விளக்கங்களை அதிகாரிகள் அளித்தனர்.இந்த பயிற்சியை தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ஷர்மிளா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தபால் வாக்கு படிவம்

முன்னதாக பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 18-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதற்காக  நடந்த பயிற்சி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தபால் வாக்கு அளிப்பதற்கு அனுமதி கோரும் படிவத்தை பூர்த்தி செய்து இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தந்த வார்டுகளில்  உள்ள பெட்டிகளில் போட்டனர்.


Next Story