லாரி மோதி பெண் போலீசின் மகன் பலி


லாரி மோதி பெண் போலீசின் மகன் பலி
x
லாரி மோதி பெண் போலீசின் மகன் பலி
தினத்தந்தி 11 Feb 2022 10:33 PM IST (Updated: 11 Feb 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பெண் போலீசின் மகன் பலி

கோவை

கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி (வயது 43). இவருடைய கணவர் தங்கப்பாலன். 
இவர்களுடைய மகன் ராகுல் அசோக் (19). இவர் கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார்.   

இருகூர் ரெயில்வே பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ராகுல்அசோக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராகுல் அசோக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Next Story