தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவு


தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2022 10:55 PM IST (Updated: 11 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆனைமலையில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வாக்குச்சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை உடனடியாக தொடங்கி, அனைத்து வாக்காளர் களுக்கு விடுபடாமல் வழங்க வேண்டும். நகராட்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும் பொள்ளாச்சி நகர எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு 24 மணி நேரமும் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். 

கவனமாக பணியாற்ற வேண்டும்

வாகன தணிக்கையை எந்தவித குறைபாடுகள் இல்லாமல் மேற் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து இருந்தாலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, தேர்தல் நடத்தை விதிகளுடன் சேர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 

வாக்கு எண்ணும் பணி முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் விழிப்புடன், கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றார். அப்போது சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

இதை தொடர்ந்து ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். 

அப்போது அவர் பேரூராட்சியில் தேர்தல் பணிக்கான படிவங்கள், எழுது பொருட்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது குறித்தும், வார்டு, வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு விவரங்களை, வாக்கு எண்ணிக்கை மையம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். 

 மேலும் அரசியல் கட்சியினரால் எழுப்பப்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார பார்வையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story