தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
இருக்கை வசதி இல்லை
வால்பாறை மெயின் ரோடு பகுதியில் பழைய பஸ்நிலையம் உள்ளது. கருமலை, வெள்ளமலை, அக்காமலை ஆகிய எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பஸ்கள் இங்கு நிற்கும். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதிகளே கிடையாது. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் பஸ் வரும் வரை கால் கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
செல்வராஜ், கருமலை எஸ்டேட்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டுவளர்ப்புத்துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகே சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. காற்று வீசும்போது குப்பைகள் சாலையில் பறந்து வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
விஜய், கோவை.
பஸ்வசதி வேண்டும்
கோவை அருகே உள்ள பிரஸ்காலனியில் இருந்து கோவை ரெயில் நிலையத்துக்கு 32-இ என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பிரஸ் காலனி பஸ்நிலையம் வருவது இல்லை. எனவே வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ் பிரஸ் காலனி பஸ்நிலையம் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கோகுல்குமார், பிரஸ்காலனி.
சுரங்க பாதையில் கழிவுநீர்
சூலூர் அருகே உள்ள நீலம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இருக்கும் குட்டையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் உள்ள சுரங்கநடைபாதை வழியாக செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியம், நீலம்பூர்.
தேங்கி கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி 44-வது வார்டு கவுண்டம்பாளையம் சேரன் நகர் ரெயில்வே மென்ஸ் காலனியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. அவை முறையாக சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
சுரேஷ், சேரன்நகர்.
திறக்கப்படாத கழிப்பிடம்
பொள்ளாச்சி வழியாக சென்னை, திருச்செந்தூர், நெல்லை, திருவனந்தபுரம், கோவை, பழனி போன்ற பகுதிகளுக்கு ரெயில் இய க்கப்படுகிறது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் திறக்கப் படுவதில்லை. இதனால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை திறந்து வைக்க வேண்டும்.
பிரகாஷ், ஜமீன்ஊத்துக்குளி.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் ரோட்டில் நடந்து செல்ல பயப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், பொள்ளாச்சி.
ஆபத்தான மரம்
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே காமராஜர் சாலையில் பட்டுப்போன நிலையில் ஆபத்தான மரம் உள்ளது. இந்த மரத்தை ஒட்டியபடி மின்ஒயர்கள் செல்கிறது. இது ஒன்றொடு ஒன்று உரசி தீப்பிடித்தால் மரம் எரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் சாலையில் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
மீனா இளங்கோவன், கோவை.
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கு உள்ள பஸ்ரேக்குகள் பல இடங்களில் சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.பயணிகள் நின்று பஸ் ஏறிச் செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகாரிகள் கோவை செல்லும் ரேக்குகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், பொள்ளாச்சி.
அடிப்படை வசதிகள்
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் சாக் கடை, சாலை மற்றும் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கிடையே அவ்வப்போது காட்டு யானை கள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் மேற்கண்ட பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், தடாகம்.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி மைதானம் அருகே உள்ள சிறுவர் போக்குவரத்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் இருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வரை உள்ள 5 மின் கம்பங்களில் மின் விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக மின் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
முத்துலிங்கம், சித்தாபுதூர்.
Related Tags :
Next Story