சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன் போக்சோவில் கைது
ஆனைமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, பள்ளி மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகின்றாள். இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அங்கு வந்தான். பின்னர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்த சிறுவன், அவளை அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் வீட்டிற்கு அழுது கொண்டு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
மேலும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் போலீசார் சிறுவனை ஆனைமலையில் வைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதும், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பாலத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
Related Tags :
Next Story