மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
கிணத்துக்கடவு பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
கிணத்துக்கடவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 48 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரங்களில் வரிசை எண், வேட்பாளரின் பெயர், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் ஆகியவை சீட்டில் அச்சடிக்கப்பட்டு பொருத்தும் நிகழ்ச்சி நேற்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கேட்ப அச்சடிக்கப்பட்ட சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் நடந்தது. .பின்னர் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறை முன்பு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story