வால்பாறையில் 73 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா


வால்பாறையில் 73 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 13 Feb 2022 8:19 PM IST (Updated: 13 Feb 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 73 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது.

வால்பாறை

வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு  தேர்தல் வருகின்ற 19 -ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக வால்பாறை தாலுகா பகுதிக்குட்பட்ட வால்பாறை நகராட்சி பகுதியில் பொது மக்கள் எளிதாக வாக்களிப்பதற்கு வசதியாக நகராட்சி நிர்வாகம் 73 வாக்கு சாவடிகளை அமைத்துள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் வாக்களர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான சுரேஷ்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்வு நடைதளம், கழிப்பிட வசதி, குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
எப்போதுமே தேர்தல் நேரத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வால்பாறை பகுதியில் உள்ள 73 வாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story