பெண்ணிடம் 4 பவுன் நகை மோசடி
கோவையில் பெண்ணிடம் 4 பவுன் நகை மோசடி செய்த ஐ.டி. நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 38 வயது பெண் கருத்து வேறு பாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு, சரவணம்பட்டியில் ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெங்களூருவை சேர்ந்த ஆண்டனி (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் 2 பேரும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது.
சம்பவத்தன்று ஆண்டனி அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி நகர் அருகே அழைத்து சென்று பேசிக் கொண்டு இருந்தார்.
பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு தனது தாயாருக்கு உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். அதை நம்பிய அந்த பெண், தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி ஆண்டனியிடம் கொடுத்து உள்ளார்.
அதன்பிறகு மாத்திரை வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. உடனே அந்த பெண் செல்போனில் ஆண்டனியை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார், ஆண்டனி மீது நகை மோசடி வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story