இடிந்து விழும் நிலையில் ஆபத்தான சமையல் கூடம்


இடிந்து விழும் நிலையில் ஆபத்தான சமையல் கூடம்
x
தினத்தந்தி 14 Feb 2022 7:13 PM IST (Updated: 14 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

எம்மேகவுண்டன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான சமையல் கூடம் உள்ளது. இதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய சமையல் கூடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெகமம்

எம்மேகவுண்டன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான சமையல் கூடம் உள்ளது. இதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய சமையல் கூடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமையல் கூடம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், செட்டியக்காபாளையம் ஊராட்சி எம்மேகவுண்டன்பாளையத்தில் டி.இ.எல்.சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் என 2 பேர் உள்ளனர். இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு பள்ளியில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் 2002-2003- ம் ஆண்டு வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் ரூ.56 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் கட்டப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கட்டிடங்கள் மேல்கூரை மற்றும் சுவர்கள் பழுதடைந்து ஒவ்வொரு இடத்திலும் பெயர்ந்து விழுந்து வந்தது. 

தண்ணீர் ஒழுகுகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் சமையல் கூடத்தில் சமையல் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். ஒருசிலர் உதவியுடன் பள்ளி சமையல் கூடம் அருகில் சிறிய அளவில் மறைத்து ஓடு மேய்ந்து அதற்குள் சமையல் செய்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் நாய்கள் உள்ளே சென்று பொருட்களை சாப்பிட்டு  வருகிறது.  இதை தவிர்க்க ஆபத்தான காணப்படும் பழைய சமையல் கூடத்தை அகற்றி விட்டு புதிய சமையல் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story