தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 14 Feb 2022 8:26 PM IST (Updated: 14 Feb 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

கோத்தகிரி கருவூலம் அருகில் இருந்து காவலர் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அவை அகற்றப்படாமல் இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்தப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்து உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகள் அங்கு கொட்டுவதை தடுக்க வேண்டும். 
சுப்ரமணி, கோத்தகிரி.

காட்டுப் பன்றிகள் தொல்லை

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகத்தில் தினமும் பகல் நேரத்திலேயே காட்டு பன்றிகள் உலா வருகின்றன. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அலுவலர்களும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் இங்கு கூட்டங்கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். 
புஷ்பராஜ், கோத்தகிரி.

ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் மாமாங்கம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமான கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஆறு மாசு ஏற்படுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். 
லட்சுமணன், கிணத்துக்கடவு.

சாலையில் ஆபத்தான பள்ளம்

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் இருந்து வடுகபாளையம் செல்லும் சாலையின் வளைவில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தை சுற்றிலும் கட்டைகள் போடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
கணேசன், வடுகபாளையம்.  

சுத்தம் இல்லாத கழிப்பறைகள்

பொள்ளாச்சியில் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அவை முறையாக சுத்தம் செய்வது கிடையாது. இதனால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
கண்மணி, பொள்ளாச்சி. 

சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் தாமோதரசாமி லே-அவுட் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சுற்றிலும் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சரியாக செல்வது இல்லை. இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பரவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கால்வாயில் ஆக்கிரமித்து உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.
குமாரவேல், சிங்காநல்லூர். 

பொதுமக்கள் அவதி

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை பத்திரங்களை பதிவு செய்ய பலர் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு ஆவணங்களுக்கு புகைப்படம் எடுக்க ஒருவர் மட்டுமே இருக்கிறார். இதனால் பத்திரபதிவு செய்ய காலதாமதம் ஆகிறது. இதன் காரணமாக இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கூடுதல் புகைப்படக்காரரை நியமிக்க வேண்டும்.
முருகன், பெரியநாயக்கன்பாளையம். 

குப்பை தொட்டி வேண்டும்

 கோவை ஒண்டிப்புதூர் நாராயணசாமி நகர், ஆர்.கே.கே.நகர், வசந்தாநகர் உள்ளது. இங்குள்ள 3 சந்திப்பில் சிறுவர் பூங்கா மற்றும் ரேஷன் கடை உள்ளது. இதன் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2 மாதமாக அங்கு குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் கொட்ட சிரமமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்தப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
மனோகரன், ஒண்டிப்புதூர். 

ஆபத்தான கம்பம்

கோவை சவுரிபாளையம் மாதா கோவில் மெயின் வீதியில் பெண்கள் பள்ளி அருகே பி.எஸ்.என்.எல். தொலைபேசி கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் அடியில் துருபிடித்து பாதி அரித்த நிலையில் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருவதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஆபத்தான அந்த கம்பத்தை சரிசெய்ய வேண்டும். 
குரியன், சவுரிபாளையம். 


Next Story