தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலையில் பள்ளம்
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் வருமான வரி அலுவலகம் உள்ள பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். முக்கியமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
மல்லிகா, கோவை.
இருக்கைகள் இல்லை
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு வேளாண் அலுவலகம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு வரும் விவசாயிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் கால்கடுக்க காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் காத்திருக்க போதிய இருக்கை வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.
கென்னடி, சுல்தான்பேட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாளச் சாக்கடை குழாய் அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பள்ளம் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர் எனவே அந்த பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரண்யா. ஆர்.எஸ்.புரம்.
நிற்காமல் செல்லும் டவுன்பஸ்கள்
பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து துடியலூருக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் காத்து நிற்கும்போது தெற்குபாளையம், விசுவநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது இல்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது பஸ்களை நிறுத்தி அவர்களை ஏற்றிச்செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
யசோதா, துடியலூர்.
பஸ்நிலையத்துக்குள் நெரிசல்
ஊட்டியில் உள்ள பஸ்நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் அந்த பஸ்நிலையத்துக்குள் தனியார் கார்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதை பார்க்கும்போது பஸ் நிலையமா அல்லது கார் நிறுத்தும் இடமா என்று நினைக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்குள்ளேயே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பஸ் நிலையத்துக்குள் கார்களை அனுமதிக்கக்கூடாது.
சந்தோஷ், ஊட்டி.
குப்பைகளை சிதறவிட்டு செல்லும் லாரி
கோவை காந்திமாநகரில் ஊழியர்கள் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு லாரியில் அள்ளிச்சென்றனர். அப்போது குப்பைகள் சாலையில் சிதறவிட்டபடி செல்கிறார்கள். இதனால் சாலை முழுவதும் குப்பைகள் விழுந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும் குப்பைகள் விழுவதால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து லாரியில் குப்பைகளை கொண்டு செல்லும்போது சிதறாமல் கொண்டு செல்ல வேண்டும்.
பெருமாள்சாமி, காந்திமாநகர்.
ஒளிராத மின்விளக்கு
கோவை சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் மின்விளக்கு கடந்த 15 நாட்களாக ஒளிராமல் இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்கை சரிசெய்து அதை ஒளிர செய்ய வேண்டும்.
செல்வராஜ், சாய்பாபாகாலனி.
குண்டும்-குழியுமான சாலை
கோவை கணபதி பஸ்நிறுத்தம் அருகே சாலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அங்கு கொட்டப்பட்ட சிமெண்டு கலவையும் பழுதானதால் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பாரதி, கோவை.
பஸ்கள் இயக்க வேண்டும்
கோவை சங்கனூர், ரத்தினபுரி வழியாக 18, 110 ஏ, 3 என் உள்பட சில பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது மேற்கண்ட 3 டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியை சே்ாந்த பொதுமக்கள் சரவர பஸ் வசதி கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் முன்பு இயக்கப்பட்ட இந்த 3 பஸ்களையும் உடனடியாக இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். அதை செய்ய முன்வர வேண்டும்.
தீபா, சங்கனூர்.
தெருவிளக்குகள் இல்லை
பொள்ளாச்சியில் உள்ள தெப்பக்குள வீதியில் இருந்து கோட்டூர் வரும் சாலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விடுதி உள்ளது. ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி செய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால், இந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கணேசன், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story