பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, அ.ம.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 151 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை தேர்தல் பார்வையாளர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சின்னம் பொருத்தும் பணி முடிந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அந்த அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் பவன்குமார் பார்வையிட்டார்.
அப்போது அவர் அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story