பொள்ளாச்சி நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 151 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. கேமரா பொருத்தும் பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வாக்குச்சாவடியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கூடுதல் பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொள்ளாச்சி நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை தவிர அரசியல், மத ரீதியான மோதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக 47 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராவுடன், வெப் கேமராவும் பொருத்தப்படுகிறது. வெப் கேமராவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரடியாக கண்காணிக்கலாம்.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story