டாப்சிலிப், நவமலைக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு


டாப்சிலிப், நவமலைக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 15 Feb 2022 11:10 PM IST (Updated: 15 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப், நவமலை பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

டாப்சிலிப், நவமலை பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்பாடு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காந்தி பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் தற்போது மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி சுற்றி திரிந்து வருகின்றன.

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள நவமலை, உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வனக் கிராமங்களுக்கு பிரசாரத்திற்கு சென்று வருகின்றனர். யானைகள் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பு கருதி வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

யானைகள் நடமாட்டம்

மழை இல்லாததால் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி வனவிலங்குகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக டாப்சிலிப்-சேத்துமடை சாலை மற்றும் நவமலை பகுதியில் மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே மாலை 5 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்ல கூடாது.

பகல் நேரங்களில் பிரசாரத்திற்கு சென்றாலும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கூட்டமாக வாகனங்களில் பிரசாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வனப்பகுதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. யானைகளை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story