பொள்ளாச்சியில் 1 மாத குழந்தை மர்ம சாவு


பொள்ளாச்சியில் 1 மாத குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 16 Feb 2022 11:09 PM IST (Updated: 16 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 1 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சி.டி.சி. மேடு தாட்கோ காலனியை சேர்ந்தவர் மெய்யப்பன். இவரது மனைவி பூமலர் (வயது 19). இவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு விநாயக் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, பூமலர் குளிக்க சென்றதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை தொட்டிலில் குப்புறப்படுத்து இருந்ததாகவும், எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து குழந்தையை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. 

இதுகுறித்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story