பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு
பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலையொட்டி பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதை கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணி காந்தி சிலை, பஸ் நிலையம் வழியாக சென்று தாலுகா போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி உள்பட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 230 பேர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் தைரியமாக வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய வேண்டும் என்றனர். |
Related Tags :
Next Story