தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார்.


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார்.
x
தினத்தந்தி 17 Feb 2022 9:24 PM IST (Updated: 17 Feb 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார்.

ஊட்டி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். 

கவர்னர் என்.ஆர்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கோவை கலெக்டர் சமீரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

பின்னர் அங்கிருந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பிறகு அவர் தனது குடும்பத்துடன் அங்கிருந்து கார் மூலம் ஊட்டி புறப்பட்டார். 

ஊட்டி வந்தார்

மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மதியம் 1.35 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடன் இருந்தனர். 

முன்னதாக கவர்னர் ஊட்டி வருகையையொட்டி ராஜ்பவனில் வளாகம் மற்றும் உள்பகுதி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. வருகிற 24-ந் தேதி வரை அவர் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பலத்த பாதுகாப்பு

மேலும் கவர்னர் தனது மகள் திருமணத்துக்காக குடும்பத்துடன் ஊட்டி வந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்பதாக தெரிய வருகிறது. 

இதனால் ராஜ்பவன் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 2 நுழைவு வாயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்கு தீவிர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


Next Story