கோவை மாவட்டத்தில் துணை ராணுவ பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி கூறினார்


கோவை மாவட்டத்தில் துணை ராணுவ பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி கூறினார்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:35 PM IST (Updated: 17 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் துணை ராணுவ பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி கூறினார்


கோவை

கோவை மாவட்டத்தில் துணை ராணுவ பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது

தேர்தல் விதிமீறல்

கோவை மாவட்டம் அசாதாரண சூழ்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெளியாட்கள் கோவை மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், தேர்தல் விதிமீறல்களிலும், பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற உன்னத நிலையில் இருந்தது. 

ஆனால் இன்று குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய காவல்துறை, குற்றவாளிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தகவல் கொடுப்பவர்களை தேடிசென்று வழக்கு போட்டு கைது செய்யும் அவல நிலையில் உள்ளது.

முறைகேடு

நேர்மையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் அப்படி நடந்து கொள்கிறதா? என்ற ஒரு சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்து உள்ளது.

 காரணம் இதுவரை கோவை மாவட்டத்தில் வாக்காளர்க ளுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற கொலுசு மற்றும் பரிசு பொருட்கள் எவ்வளவு கைப்பற்றப்பட்டது?. 

அதன் மதிப்பு என்ன?. முறைகேட்டில் ஈடுபட்ட எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? என்பது போன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரிய வில்லை. இது பல்வேறு சந்தேகங்க ளை எழுப்பி உள்ளது.

துணை ராணுவம்

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெற மத்திய துணை ராணுவ படையினரை வைத்து இந்த தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story