மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசினார்


மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசினார்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:38 PM IST (Updated: 17 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசினார்


 கோவை

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். வெள்ளக்கிணரில் திறந்த வேனில் இருந்தபடி அண்ணாமலை பேசியதாவது

மத்திய அரசின் திட்டங்களை உங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்றால் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

 பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும், அரசாணை இல்லா மலும் முதல்-அமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். 

கரூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க. குழு கோவைக்கு வந்து கொலுசு களை வழங்கி வருகிறார்கள். அதை ஆய்வு செய்தபோது 16 சதவிகிதம் தான் வெள்ளி உள்ளது. 

சட்டமன்ற தேர்தலின் போது எப்படி காதில் பூ சுற்றினார்களோ 

அதேபோன்று இப்போதும் பூசுற்றுவார்கள். மத்திய அரசின் திட்டங் களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.

30 சதவீத கமிஷன்

பின்னர் சுப்பிரமணியபாளையத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாவது

லஞ்சம் வாவண்யம் பெருகி விட்டது. 30, 40 சதவீதம் கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. 

ஸ்மார்ட் சிட்டிக்காக மத்திய அரசு நிதியை அள்ளி கொடுத்தது. ஆனால் எதுவும் சரி செய்யப்படவில்லை. 

சுத்தமான குடிநீரை வீடுகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. அதை ஜல்சக்தி திட்டம் மூலம் கொண்டு செல்ல பா.ஜனதா வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க யாரிடமும் பணம் வாங்காமல் 2 டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு உள்ளது. பொங்கல் தொகுப்பில் உச்சகட்ட ஊழல் செய்துள்ளனர். 

ஒவ்வொரு பெரிய கட்சி வேட்பாளருடனும் ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள். (அப்போது கொலுசுவை தூக்கி காட்டினார்). இது தெரிகிறதா?. இந்த கொலுசு எங்க ஊர்க்காரர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

தாமரைக்கு ஓட்டு

படத்தில் கவுண்டமணி சொன்னது போல வெள்ளி பூசுன மாதிரி இருக்கும். பூசாத மாதிரியும் இருக்கும். கொலுசின் மொத்த விலை ரூ.200, ஹாட்பாக்ஸ் ரூ.100. ஏமாற்று வேலையை நம்பி ஏமாந்து விடாதீர்கள். 

நாங்கள் சாதனையை மட்டும் தான் சொல்கிறோம். எது வந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஓட்டு மட்டும் தாமரை சின்னத்துக்கு போடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர், சிவானந்தபுரம், வி.கே.எல்.நகர் பொன்னையராஜ புரம், சுண்டக்காமுத்தூர், போத்தனூர், ஜோதிநகர், காளப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு மசக்காளிபாளையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

முன்னதாக கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது

நேர்மை, நடுநிலைமை

வெள்ளிக்கொலுசு, ஹாட் பாக்ஸ் மூலம்  தி.மு.க.வினர் வெற்றி பெற நினைக்கிறார்கள். 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். வேறு மாவட்டத்தில் இருந்து கோவை வந்துள்ள தி.மு.க.வினர் தேர்தலை மாற்றலாம் என நினைக்கிறார்கள். 


எனவே தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், அதிகாரிகள் நடுநிலை யாகவும் செயல்பட வேண்டும். 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டவர்களை பா.ஜனதாவினர் பிடித்துக் கொடுத் தனர். 

ஆனால் வழக்கு பதிவு செய்ய வில்லை. கோவை தேர்தல் அதிகாரியை 4 முறை மாற்றி உள்ளனர். முதல்-அமைச்சர் நேரடியாக மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story