கோவை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது இதில் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் வாக்களிக்கின்றனர்


கோவை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது இதில் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் வாக்களிக்கின்றனர்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:30 PM IST (Updated: 18 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது இதில் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் வாக்களிக்கின்றனர்


கோவை,
கோவை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் வாக்களிக்கின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற்றது. 

இதில் கோவை மாவட்டத்தில் மொத் தம் உள்ள 811 இடங்களுக்கு 4,573 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். 146 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 1,066 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 802 இடங்களுக்கு மட்டும் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மாநகராட் சியில் 778 பேரும், 7 நகராட்சிகளில் 847 பேரும், 33 பேரூராட்சிகளில் 1,727 பேர் என மொத்தம் 3,352 பேர் களத்தில் உள்ளனர்.


வாக்காளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் 12 லட்சத்து 23 ஆயி
ரத்து 488 ஆண், 12 லட்சத்து 50 ஆயிரத்து 300 பெண், 3-ம் பாலினத்தவர்கள் 526 என மொத்தம் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக கோவை மாவட்டத்தில் மொத்தம் 2,312 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் மாநகராட்சியில் 169 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

தேர்தலையொட்டி கோவை மாநகர் பகுதியில் 2,500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும், ஊரக பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

இதற்காக தமிழ்நாடு சிறப்பு அதிரப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அதிக பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். முன்னதாக வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வித வாக்குகளும் பதிவாக வில்லை என்பதை காண்பித்து  தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்வார்கள்.
சரிபார்ப்பார்கள்

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? என்ப தை வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள். அதன்பிறகு வாக்குப்பதிவு தொடங்கும்.




வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய மண்டல அளவில் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இதுதவிர பறக்கும் படையினர் மாற்று எந்திரத்துடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

கொரோனா பாதிப்பு

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் ஊழியர்கள் கொரோனா கவச உடை அணிந்து பணியில் இருப்பார்கள். வாக்குச்சாவடி வரும் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்படும். வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
வாக்கு எண்ணிக்கை 
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட வரிசைப்படி மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். பின்னர் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முன்னிலையில் எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்படும். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.கோட்டைமேடு உள்ளிட்ட  வாக்குச்சாவடி களில் புகை மருந்து அடிக்கப் பட்டது.


வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 22-ந் தேதி சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று மாலையே தேர்தல் ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வந்தனர். 



வெயில் கார
ணமாக வாக்குச்சாவடிகளில் சாமியானா போடப்பட்டு உள்ளது. இதனால் வாக்காளர்கள் நிழலில் நின்று ஓட்டு போட வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஜி.எம்.நகர் பதற்றமான வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதை தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story