வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
வால்பாறை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் வால்பாறை பகுதிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.
இந்த நிலையில் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்திருந்தனர். இதனால் வால்பாறை பகுதியில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதி, கூழாங்கல் ஆறு பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் அனைவரும் குறைந்தளவே தண்ணீர் இருந்த கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். மேலும் மாலையில் வால்பாறை பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் மாலை நேரத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருந்தது. தேர்தல் காரணமாக கடைகள் ஏதும் திறக்கப்படாததால் வால்பாறை நகர் பகுதிக்குள் வராத சுற்றுலா பயணிகள் தேர்தல் முடிந்தவுடன் மாலையில் நகர் பகுதிக்கு வந்து விடுதிகள், லாட்ஜில் அறைகள் எடுத்து தங்கினார்.
Related Tags :
Next Story






