பொள்ளாச்சியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு


பொள்ளாச்சியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:02 PM IST (Updated: 19 Feb 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சியில் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.

பொள்ளாச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சியில் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.

வாக்காளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஆண்கள் 39,543 பேரும், பெண்கள் 42,777 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 33 பேரும் சேர்த்து மொத்தம் 82,353 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் ஆண்கள் 9468 பேரும், பெண்கள் 10035 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 19,504 வாக்காளர்கள் உள்ளனர். 

ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் ஆண்கள் 7441 பேரும், பெண்கள் 8101 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும்சேர்த்து மொத்தம் 15,545 வாக்காளர்களும், சமத்தூரில் ஆண்கள் 2701, பெண்கள் 2976 என மொத்தம் 5677 வாக்காளர்களும், ஆனைமலையில் ஆண்கள் 8,435 பேரும், பெண்கள் 9,628 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் சேர்த்து மொத்தம் 18,071 வாக்காளர்களும், வேட்டைக்காரன்புதூரில் ஆண்கள் 8082 பேரும், பெண்கள் 9091 பேரும் சேர்த்து மொத்தம் 17,173 வாக்காளர்களும், ஒடையகுளத்தில் ஆண்கள் 5,534 பேரும், பெண்கள் 6201 பேரும் சேர்த்து மொத்தம் 11,735 வாக்காளர்களும், கோட்டூரில் ஆண்கள் 11,272 பேரும், பெண்கள் 12,697 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் சேர்த்து மொத்தம் 23,852 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்குப்பதிவு

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையொட்டி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொள்ளாச்சி நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகளும், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 22 வாக்குச்சாவடிகளும், ஜமீன்ஊத்துக்குளியில் 20 வாக்குச்சாவடிகளும், கோட்டூரில் 29 வாக்குச்சாவடிகளும், ஆனைமலையில் 20 வாக்குச்சாவடிகளும், ஒடையகுளத்தில் 17 வாக்குச்சாவடிகளும், வேட்டைக்காரன்புதூரில் 21 வாக்குச்சாவடிகளும், சமத்தூரில் 12 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. 

நீண்ட வரிசை

வாக்குப்பதிவையொட்டி முதலில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதியவர்கள், பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் வாக்களித்தனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்தனர். நகராட்சி, பேரூராட்சிகளில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

600 போலீசார் பாதுகாப்பு

வாக்காளர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒருமுறை பயன்படுத்த கூடிய கையுறை வழங்கப்பட்டது. வாக்காளர்கள் வாக்களித்த பின் கையுறையை கழற்றி, அங்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் போட்டனர். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்பு உள்ள நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 

வெப் கேமரா பொருத்த வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலையொட்டி கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி தலைமையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தன்னார்வலர்கள் வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை சக்கர நாற்காலியில் வைத்து வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாய்வுதளம் அமைக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க.-தி.மு.க. வாக்குவாதம்

கிணத்துக்கடவு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 48 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 4,130 ஆண் வாக்காளர்கள், 4,507 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 8,638 வாக்காளர்கள் உள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச்சாவடியும், ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடியும், கல்லங்காட்டுப்புத்தூர் தொடக்கப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், சிங்கராம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, பகவதிபாளையம் தொடக்கப்பள்ளியில் தலா 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டது. 

வாக்காளர்கள் ஆவலோடு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் நடந்தது. உடனே அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். காலையில் விறு விறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 1 மணிக்கு பிறகு மந்தமாக காணப்பட்டது. 

1 More update

Next Story