பஞ்சு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


பஞ்சு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:05 PM IST (Updated: 20 Feb 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பஞ்சு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.

கோவை

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 56) பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஓட்டு போடுவதற்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து துடியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். 

பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், 5 ஆயிரம் ரொக்கப் பணம், ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

 இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story