தேங்காய் வியாபாரி அடித்துக் கொலை
ஆனைமலை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தேங்காய் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆனைமலை
ஆனைமலை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தேங்காய் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தண்ணீர் பிடிப்பதில் தகராறு
கோவை மாவட்டம் ஆனைமலை சரவணன் டாக்டர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 27). இவர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பகுதியில் தேங்காய் பழம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் பரமேஸ்வரனின் சகோதரி பரமேஸ்வரிக்கும், அகல்யா என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பரமேஸ்வரன், அகல்யா மற்றும் அவரின் தாய் பானுமதியிடம் சென்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்–குவாதம் ஏற்பட்டது. நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
அப்போது அங்கு வந்த அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடைய உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் பரமேஸ்வரனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பரமேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்–கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், தமிழ்ச்செல்வன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தண்ணீர் பிடிப்பதில் நடந்த தகராறில் வாலிபர் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story