சுல்தான்பேட்டை அருகே தேர்தல் பணிக்கு சென்ற லாரி கவிழ்ந்தது


சுல்தான்பேட்டை அருகே தேர்தல் பணிக்கு சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 20 Feb 2022 10:32 PM IST (Updated: 20 Feb 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே தேர்தல் பணிக்கு சென்ற லாரி கவிழ்ந்ததில் போலீஸ்காரர், டிரைவர் காயம் அடைந்தனர்.

சுல்தான்பேட்டை

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையைச்சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 46). லாரி டிரைவர். இவர் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக லாரியுடன் சென்றார். ஓட்டுப்பதிவு முடிந்த பின் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் இறக்கிவைத்து விட்டு நேற்று அதிகாலை உடுமலைபேட்டை நோக்கி லாரியை ஓட்டி சென்றார்.அவருடன் உடுமலையை சேர்ந்த போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவரும் இருந்தார். இந்த லாரி சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப் புத்தூர் பகுதியில் சென்றபோது லாரி டிரைவர் தூங்கியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக லாரி நிலைதடுமாறி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த டிரைவர், போலீஸ்காரர் என இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரியை பொக்லைன் மூலம் மீட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குபதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story