தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் விளக்கம்


தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2022 10:49 PM IST (Updated: 20 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.


பொள்ளாச்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் 11 பேர் அடங்கிய குழுவினர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் ஆனைமலையில் தற்போது தங்கி உள்ளனர். இவர்கள் மொத்தம் 75 நாட்கள் தங்கி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், வேட்டைக்காரன்புதூர் கிராமத்தில் சமூக வரைபடம் ஆகியவற்றை மாணவர்கள் வரைந்தும், பொதுமக்களை வரையச்செய்தும் எங்கெங்கு என்ன, என்ன முக்கிய அலுவலகங்கள் உள்ளன, அங்கு கிடைக்கும் பொருட்கள் பற்றியும் மாணவர்கள் விரிவாக பொதுமக்களுக்கு விளக்கினர். இதற்கு வேட்டைக்காரன்புதூர் கிராம மக்கள் வரவேற்று ஒத்துழைப்பு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்கள் தென்னை மூடாக்கு, தென்னை டானிக், தென்னையில் அதிக மகசூல் பெற இடவேண்டிய உரங்கள், கால அளவு உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்குவதுடன், அவர்களுடைய அனுபவம் குறித்து தெரிந்துகொள்ளவும் தீவிரம் ஆர்வம் கொண்டுள்ளனர்.

Next Story