கோவை அருகே சூலூரில் மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்


கோவை அருகே சூலூரில் மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்
x
தினத்தந்தி 21 Feb 2022 10:18 PM IST (Updated: 21 Feb 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே சூலூரில் மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்


கருமத்தம்பட்டி

கோவை அருகே சூலூரில் மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

டெங்கு காய்ச்சலுக்கு மகன் பலி

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். 

இவருடைய மனைவி சரண்யா (36). இவர்களுக்கு ஷியாம் (14) என்ற மகன் இருந்தான். ஷியாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டான்.

இதனால் கணவன்-மனைவி மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சரண்யாவின் பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. இதனால் சத்யராஜ், சரண்யா ஆகிய 2 பேரும் மகனை நினைத்து கவலைப்பட்டுள்ளனர்.

தம்பதி தற்கொலை 

இந்த நிலையில் நேற்று சத்யராஜ் நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

 இதனால் அவரது வீட்டின் தரைதளத்தில் கடை வைத்திருந்த பிரசாத் என்பவர், மேல் பகுதிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.


உடனே உள்ளே சென்று பார்த்தபோது, சத்யராஜ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மேலும் அருகில் சரண்யா இறந்த நிலையில் கிடந்தார்.

 அவரது கையில் மகன் ஷியாம் படம் இருந்தது. இதுகுறித்து உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.

பிறந்த நாளில் சோக முடிவு

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், மகன் இறந்த துக்கத்தில் இருந்த சரண்யா, தனது பிறந்த நாளான நேற்று மகனை நினைத்து கடும் வேதனை அடைந்துள்ளார். 

இதனால் துக்கம் தாளாமல் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதற்கிடையில் மற்றொரு அறையில் இருந்து வந்த சத்யராஜ், மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து அவர் மனைவியை கீழே இறக்கிவிட்டு, அதே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story