காஞ்சீபுர விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுர விவசாய சங்கத்தினர் ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டத்தை ரத்து செய்திட கோரி போராடிய விவசாயிகளின் மீது லக்கிம்பூர் கேரியில் காரை ஏற்றி படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான ஆதிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை மறுபரிசீலனை செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் சாரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நேரு, பெருமாள் லிங்கநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, மலைவாழ்மக்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story