83 வேட்பாளர்கள் ‘டெபாசிட்’ இழப்பு
83 வேட்பாளர்கள் ‘டெபாசிட்’ இழப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் உள்பட 151 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த நிலையில் வார்டில் பதிவாகும் செல்லதக்க வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்குகள் பெற வேண்டும். இல்லையெனில் வேட்பாளர் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும்.
அதன்படி நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர், பா.ஜனதா வேட்பாளர்கள் 20 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 20 பேர் மற்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் 7, 11, 14, 21 மற்றும் 28 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்தனர். மொத்தம் 83 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
Related Tags :
Next Story