விபத்து ஏற்படுத்திய காரை துரத்தி பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
புதுச்சேரியில் பெண் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஜீவிதா. கடந்த 19 ஆம் தேதி இவர் கடலூர் சாலை தவளக்குப்பம் சிக்னலில் பணியில் இருந்த போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.
இதைக் கண்ட ஜீவிதா, அங்கிருந்தவர்கள் உதவியுடன் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். இதனிடையே அந்த வாகன ஓட்டி ஜீவிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அவரை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ஜீவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய தமிழகத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story