தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
நடைபாதையில் இடையூறு
கோத்தகிரி கடைவீதியில் இருந்து குடியிருப்புகளுக்கு செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை வழியாக இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார் கள். அத்துடன் அங்கு குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் சேதடைந்து வருகின்றன. எனவே அதிகாரிகள் நடவடக்ைக எடுத்து நடைபாதையில் வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.
ரமேஷ், கோத்தகிரி.
எச்சரிக்கை பலகை வேண்டும்
பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் செஞ்சேரிமலை பிரிவு உள்ளது. இங்கு பல்லடத்தில் இருந்தும், பொள்ளாச்சியில் இருந்தும் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு விழிப்புணர்வு பலகை வைத்தால் வாகனங்கள் மெதுவாக செல்லும். இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கலாம். அதை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
எஸ்.சித்ராதேவி, சுல்தான்பேட்டை.
புழுதி பறக்கும் சாலை
கோவை-திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதில் ராமநாதபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
வீணாகும் குடிநீர்
கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள ேநரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆடீஸ் வீதி வழியாக அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலை அடையலாம். இதில் போலீஸ் குடியிருப்பு அருகே சாைல ஓரத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் சென்று வருகிறது. அத்துடன் சாலை ஓரத்தில் தேங்கியும் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும்.
ஆனந்தன், காந்திபுரம்.
இறைச்சி கழிவுகள்
கோவை மாவட்டம் சோமனூர் அருகே நொய்யல் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஏராளமாக இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு இங்கு போடப்பட்டு உள்ள இறைச்சி கழிவுகளை சுத்தம் செய்வதுடன், அங்கு கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
அருண், சோமனூர்.
தெருநாய்கள் தொல்லை
ரத்தினபுரி மேஸ்திரி பழனியப்பன் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலையில் ஹாயாக செல்லும் இந்த நாய்கள், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களை துரத்துகிறது. அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால், பலர் கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
சவுந்திரகனி, கோவை.
குவிந்து இருக்கும் குப்பைகள்
கோவை கணபதி அருகே உள்ள சின்னவேடம்பட்டி கியாஸ் குடோன் சாலையின் ஓரத்தில் ஏராளமான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பைகள் காற்றில் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் துர்நாற்றமும் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
குமாரவேல், கணபதி.
ஆபத்தான மரக்கிளை
கோவையில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் வீரகேரளம் அருகே பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மரத்தின் கிளை காய்ந்து எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய நிலை இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த மரக்கிளை ஒடிந்து கீேழ விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த மரக்கிளையை அகற்ற வேண்டும்.
மனோகரன், கோவை.
குடிநீர் குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி தேர்நிலைத்திடல் அருகே சாைல ஓரத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அங்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
மல்லேஸ்வரன், மகாலிங்கபுரம்.
குண்டும் குழியுமான சாலை
பொள்ளாச்சி- கோவை சாலையில் உள்ள சேரன்நகரில் ரோடு பழு தடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சுந்தரி, சேரன்நகர்.
Related Tags :
Next Story