கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது
நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
நெகமம்
நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
கொப்பரை தேங்காய்
தமிழகம் முழுவதும் 42 கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் செஞ்சேரிமலை, நெகமம் ஆகிய 2 இடங்களில் மட்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட இருக்கிறது. இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்காமல் இருந்தது.
கொள்முதல்
இந்தநிலையில் நெகமத்தில் அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் 6 விவசாயிகள் 192 மூட்டை கொப்பரை தேங்காய்களுடன் வந்து விற்பனை செய்து பயனடைந்தனர். மேலும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, சேமிப்புக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து கொப்பரை விற்பனைக்கு பதிவு செய்தனர்.
ஆய்வு
இதில் கோவை வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்திற்கு வந்து தர ஆய்வு மேற்கொண்டார். மேலும் பிற விவசாயிகளும் அரசு ஆதார விலை திட்டத்தில் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்து விற்று பயன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகளின் பதிவு எண்களின் அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வாணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story