டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி


டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 23 Feb 2022 10:03 PM IST (Updated: 23 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையொட்டி தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையொட்டி தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சல்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய வதம்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(வயது 33). இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 

உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேவதி, கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்ைசை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தடுப்பு பணிகள்

இதை அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, பெரிய வதம்பச்சேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவை அமைத்தார். 

இந்த குழுவினர் பெரிய வதம்பச்சேரியில் கொசு மருந்து அடித்தல், தண்ணீர் தேங்குவதை தடுத்தல் போன்ற தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆய்வின்போது மாவட்ட மலேரியா அலுவலர் முருகப்பா, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வனிதா, டாக்டர்கள் பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் உடனிருந்தனர். 

17 பேர் பாதிப்பு

டெங்கு தடுப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் செய்து வருகின்றனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த 2 மாதங்களாக 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 16 பேர் குணமடைந்த நிலையில், ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Next Story