அ.தி.மு.க. வெற்றியை பாதித்த பா.ஜனதா
அ.தி.மு.க. வெற்றியை பாதித்த பா.ஜனதா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வசந்த் 668 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெங்கிடுசாமியை விட 69 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வார்டில் சுயேச்சை வேட்பாளர் பஞ்சலிங்கம் 74 வாக்குகள் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பறிபோனதாக கருதப்படுகிறது.
இதேபோன்று 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைவாணி, அ.தி.மு.க. வேட்பாளர் அர்ச்சனாவை விட 33 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வார்டில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தி 44 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வெற்றியை பறித்தார். 26-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சாந்தலிங்கத்தை விட அ.தி.மு.க. வேட்பாளர் பழனிக்குமார் 13 வாக்குகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த வார்டில் பா.ஜனதா வேட்பாளர் சுதாகர் 68 வாக்குகள் பெற்றது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story