விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2022 10:04 PM IST (Updated: 23 Feb 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி(வயது 56). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான பாலசாமி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பாலசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story