செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,384 சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,384 சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
1,384 விவசாயிகளுக்கு
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் பண்ணைக் கருவிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 14.08.2021 அன்று சட்டசபையில் ஆற்றிய உரையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,384 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், பண்ணை பணிகளை காலதாமதமின்றி முடித்திடவும், பொருளாதாரத் தேவைகளுக்கு உதவிடும் பொருட்டும் கடப்பாரை, இரும்பு சட்டி, மண்வெட்டி, களைக்கொத்து தலா ஒன்றும், கதிர் அரிவாள் 2 எண்கள் கொண்ட ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வேளாண் கருவிகளின் தொகுப்பு 2 எண்கள் சிறு மற்றும் குறு பொது பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும், பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு 90 சதவீத மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.
முன்னுரிமை
மேற்கண்ட வேளாண் கருவிகள் பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான பட்டா, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவி லான புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது வட்டாரத்தின் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பலன் பெறலாம்.
மேலும் இத்திட்டத்தில் மகளிர் குடும்பத் தலைவர்களுக்கும், விதவை பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து தொகுப்புகள் வழங்கப்படும் எனவும் முன் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வேளாண் பண்ணை் கருவிகள் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இ்வ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story